ஓமன் நாட்டில் நடந்த சாலை விபத்தில், சாலையை கடக்க காத்திருந்த 2 மலையாள செவிலியர்கள் உட்பட 3 பேர் பலி.

உலக செய்திகள்
பகிர

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மஜிதா ராஜேஷ், கொல்லத்தை சேர்ந்த ஷஜீரா இலியாஸ் மற்றும் எகிப்தை சேர்ந்த பெண் ஒருவரும் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பின்னாடி அதி வேகமாக வந்த கார் முன்னாடி சென்று கொண்டிருந்த கார் மீது மோதி சாலையை கடக்க காத்திருந்த 5 செவிலியர்கள் மீது பலமாக மோதியதில் மூன்று செவிலியர்கள் சம்பவ இடத்திலே பலி. மற்ற இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மஸ்கட்டில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள டாகிலியா கவர்னரேட்டில் உள்ளூர் நேரப்படி நண்பகலில் இந்த விபத்து நடந்துள்ளது.

Source : https://www.google.com/amp/s/www.onmanorama.com/news/kerala/2024/04/25/malayali-nurses-killed-road-accident-nizwa-oman.html

0 thoughts on “ஓமன் நாட்டில் நடந்த சாலை விபத்தில், சாலையை கடக்க காத்திருந்த 2 மலையாள செவிலியர்கள் உட்பட 3 பேர் பலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *