மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாக்கு உட்பட்ட நவினிபட்டி அருகில் ,காரைக்குடி தஞ்சாவூரில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் மேலூர் உள்ளே வராமல் பைபாஸ் வழியாக மதுரை செல்ல ஏதுவாக பிரிவு சாலை அமைக்க பட்டுள்ளது. அந்த பிரிவு சாலை இருக்கும் இடத்தில் எந்த ஒரு மின் விளக்கும் இல்லாத காரணத்தால் புதிதாக அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் பிரிவு சாலை யை கடந்து சென்று மீண்டும் யூடர்ன் செய்து பிரிவு சாலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தேவை இல்லாமல் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் அளித்து வருகிறார்கள்.மிக முக்கியமான இந்த பிரிவு சாலையில் மின்விளக்கு அமைத்தால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம்.