minnidhal

கேரளா படகு விபத்து 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்த சோகம்

உலக செய்திகள்
பகிர

தூவல்தீரம் கடற்கரை அருகே சுற்றுலாப் படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை படகு கவிழ்ந்ததில் 8 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

30க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற படகு, தனுர் பகுதியில் உள்ள தூவல்தீரம் கடற்கரைக்கு அருகில் உள்ள கழிமுகம் அருகே இரவு 7:30 மணியளவில் கவிழ்ந்தது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் இந்திய கடலோர காவல்படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட 22 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்

“நாங்கள் அனைத்து ஏஜென்சிகளின் உதவியையும் கோரியுள்ளோம். NDRF மற்றும் கடலோர காவல்படை குழுக்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு வந்துவிட்டன. நாங்கள் கடற்படையின் உதவியையும் நாடியுள்ளோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

கவிழ்ந்த கப்பலில் இருந்தவர்களில் 10 மாத குழந்தை உட்பட 10 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *