மாநில செய்திகள்
மேலூர் சாலையோர வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மேலூர் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்கிட 1 வருடத்திற்க்கு முன்பு வந்தும் வழங்கிடாமல், நகராட்சி குப்பைக்கிடங்கில் துருபிடித்து கிடக்கும் 4 சக்கர தள்ளுவண்டிகள் பழைய இரும்புகடைகளுக்கு ஏலம் போடுவதற்க்கு முன்பு வியாபாரிகளுக்கு வழங்கிட வேண்டி தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பு மேலூர் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது..உடனே வழங்கா விட்டால் போராட்டம் தொடரும் என்றும் அறிவிப்பு.
ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று லேசான தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை.